கள்ளச்சாராயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கடலூர் காவல்துறையினர்!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில்,  மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள். பாலாஜி, தர்மலிங்கம், உதவி ஆய்வாளர்கள். கிருஷ்ணமூர்த்தி, பிரகஸ்பதி  மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர்  ஆகியோர்கள் என மொத்தம் 50 காவல்துறையினர்  இணைந்து சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை , கள் இறக்குதல்  தடுப்பு சம்பந்தமாக சிறுபாக்கம் காவல் நிலைய பகுதிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட 

எல்லையோர பகுதிகளில் 4  குழுக்களாக பிரிந்து அதிரடி தேடுதல் வேட்டை காலை 7 மணி முதல் 08.30 மணி வரை மேற்கொண்டனர். மேலும் கிராம மக்களிடம் சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வது, கள் இறக்கி விற்பனை செய்கிறார்கள் என தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்குமாறும், தகவல் தெரிவிப்பரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என் விழிப்புணர்வு ஏற்படுத்தி காவல் அதிகாரிகளின் செல்போன் எண்களை பொதுமக்களிடம் அளித்தனர். கடலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது. சாராயம் விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!