ராணிப்பேட்டை - வக்ப் திருத்தச் சட்டம் குறித்து ஒன்றிய அரசை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ப். திருத்தச் சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துக்களை கைப்பற்றுவதற்காக முயற்சி செய்யும் ஒன்றிய பாஜக அரசின் பாசிசத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான சீமா ரமேஷ் கர்ணா, பிரபா இளையநிலா, பிரபுதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். ராணிப்பேட்டை தொகுதி செயலாளர், மாந்தாங்கல் ராஜா அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்பு செயலாளர். அப்துல் நாசர், முகமது அலி, முகமது அஸன், முகமது காலித் , ஆசாத் , சலீம், வெற்றி வளவன் , ஆகியோ கண்டன உரை ஆற்றினார். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணைநிலை நிர்வாகிகள் , மகளிர் பொறுப்பாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் ராணிப்பேட்டை நகர செயலாளர் ராஜசேகர் நன்றி தெரிவித்தார்.

சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!