கடலூர் - காணாமல் போன வாகனம் வாகன தணிக்கையின்போது கண்டுபிடித்த உதவி ஆய்வாளர். சிவப்பிரகாசம்!


கடலூர் மாவட்டம் புதுசத்திரம் காவல் நிலையம் 6.4.25 தேதி இரவு  உதவி ஆய்வாளர். சிவப்பிரகாசம் மற்றும்  முதல் நிலை காவலர்  விமல்குமார் ஆகியோர் ஆலபாக்கம் மேம்பாலத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டபோது TN 31 CW 5079 ஆக்டிவா 6G என்ற இருசக்கர வாகனத்தை  E. Beat செயலி மூலம் சோதனை செய்தபோது மேற்படி வாகனம் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கடந்த 26. 03. 2025 தேதி காணாமல் போனதாக  காவல் நிலையத்தில் குற்ற எண் 136 / 25  வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருப்பதாக தெரிய வந்ததின்பேரில்  வாகனத்தையும், வாகனத்தை ஓட்டி வந்த நபரையும் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருட்டு வாகனத்தை கண்டுபிடித்த போலீசாரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!