கடலூர் செய்தி துளிகள்!
👉.நெய்வேலியை சேர்ந்த கல்லூரி மாணவர் அடமானம் வைத்த இரு சக்கர வாகனத்தை மீட்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டார்.
👉.தமிழ்நாட்டில் கடந்த 28-ம் தேதி துவங்கிய sslc பொது தேர்வு நேற்று நிறைவடைந்தது.
👉.நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உட்பட 3 பேர் கைது.
👉.என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய 60% ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தே.மு.தி.க பொதுச் செயலாளர் வலியுறுத்தல்.
👉.பண்ருட்டி அருகே செம்மேடு அண்ணா நகர் பகுதியில் கோவில் திருவிழாவிற்கு சென்ற சிறுமியை முந்திரி தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது.
👉.பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு தெற்கு தெரு பகுதியில் காதலிப்பதாக கூறி 16 வயது சிறுமி 6 மாத கர்ப்பம் குற்றவாளி தப்பி ஓட்டம் போலீஸ் வலைவீச்சு.
👉.திட்டக்குடி அருகே குமார கிராமத்தில் வீடு புகுந்து கணவன்-மனைவி மீது தாக்குதல் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
👉.நாளை 17-ம் தேதி ஒன்றிய அளவில் நடக்கும் உயர்கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்.
👉.பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கோமா நிலையில் வைத்திருக்கும் எங்களை கருணை கொலை செய்யக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
👉.விருத்தாச்சலத்தில் குடிபோதையில் அடுத்தடுத்து 5 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளிவிட்டு காரை திருடிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
👉.கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கும் இந்த பணியில் 2165 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்.
👉.சேத்தியாதோப்பு அருகே மாற்று குடியிருப்பு இழப்பீடு வழங்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் என்.எல்.சிக்கு சொந்தமான வாகனங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
👉.திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தில் புதிதாக திருமணமான மணப்பெண் காதலனுடன் ஓட்டம் சோகம் தாங்காமல் புது மாப்பிள்ளை தற்கொலை போலீஸ் விசாரணை நடத்திய வருகின்றனர்.
👉.சீர்காழி பகுதியைச் சேர்ந்த நபர் கஞ்சா போதையில் கடலூர் பகுதியில் நின்று கொண்டிருந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ வழக்கில் கைது.
👉.கடலூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு தூக்கில் தொங்கியபடி பாட்டாளி முன்னேற்ற தொழிற்சங்க பேரவையினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
👉.புதுப்பாளையத்தைச் சேர்ந்த பெண் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள நகை கடையில் நகையை பற்ற வைக்க வந்த போது தொலைத்துவிட்டார். போலீசார் சிசிடிவி உதவியுடன் கண்டுபிடித்தள்ளனர்.
👉.கடலூரில் சமத்துவ நாள் விழாவில் 4377 பேருக்கு ரூ.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
👉.கடல்வாழ் உயிரினங்கள் இனப் பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 240 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லக்கூடாது என உத்தரவு.
👉.திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த பாதிரிக்குப்பம் கூட்டுறவு நகரை சேர்ந்த நபர் பணியில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
👉.புவனகிரி அருகே சீயப்பாடி கிராமத்தைச் சேர்ந்த நபர் மஞ்சக் கொள்ளை சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
👉.சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புக்கான நிலுவைத் தொகையை கேட்டு ஆலையை முற்றுகையிட்ட விவசாயிகளால் அப்பகுதியில் பரபரப்பு.
👉.சிதம்பரம் அருகே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையை தட்டிக் கேட்ட மாமியார் தலையில் அம்மிக்கல்லை போட்ட மகனை போலீசார் கைது செய்தனர்.
👉.விருத்தாச்சலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் வீட்டில் திடீரென சமையல் சிலிண்டர் தீ பற்றி எரிந்தது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக