ராணிப்பேட்டை மாவட்ட சமரச மையம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி!


ராணிப்பேட்டை சமரச மையம் முதன்மை நீதிமன்றம் சமரசம் குறித்த விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி ராணிப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி M. செல்வம் முதன்மை குற்றவியல் நீதிபதி  பாலகிருஷ்ணன், சார்பு நீதிபதி யஷ்வந்த் ராவ் மாவட்ட உரிமையியல் நீதிபதி நவீன் துரை பாபு மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேந்தர் செயலாளர் சரவணன் ஆகியோரால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரணி நீதிமன்ற வளாகத்தில் புறப்பட்டு பஜார் பஸ் நிறுத்தம் வீதி போலீஸ் ஸ்டேஷன் வழியாக சென்று பழைய பஸ் நிலையம் சந்தைமேடு வழியாகச் சென்று அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முடிவு பெற்றது. 

இந்தப் பேரணியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பங்கேற்று அனைத்து நீதிமன்றங்களிலும் செயல்படுகின்றன,  உங்கள் வழக்குகளை சமரசத்திற்கு அனுப்பக் கோரலாம் , நீங்கள் ஒப்புக் கொள்ளும்  முடிவுகள் மட்டுமே எட்டப்படும் ..சமரசத்தின் பயன்கள் குறித்து பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர்.  விரிவான பேச்சு வார்த்தை, சுமுகமான தீர்வு , தனிப்பட்ட கட்டணம் இல்லை , முழு நீதிமன்ற கட்டணம் திரும்ப பெறலாம், தனி அறையில் பேச்சுவார்த்தை , இறுதியான தீர்வுகள், மற்றும் போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுபேரணியாக புறப்பட்டனர். மேலும் விவரங்களுக்கு நீதிமன்றம் மாவட்ட மற்றும் மக்கள் நீதிமன்றங்களில் உள்ள சமரசம் மையங்களை அணுகவும்.

சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!