கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

✍️.கடலூரில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை தணிக்க டாஸ்மாக்கில் கூலிங்காக சுவையான பீர் விற்பனை நடைபெறுகிறது மது பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

✍️.குறிஞ்சிப்பாடி பாட்டை வீதியில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

✍️.சிதம்பரம் வ உ சி தெருவில் மகளின் காதலனை வெட்டி கொலை செய்த தம்பதிக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிதம்பரம் நீதிமன்றம்.

✍️. பரங்கிப்பேட்டை கணக்கம்பாளையம் கிராமத்தில் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

✍️.கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உயிரிழந்ததையொட்டி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடி அறைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

✍️. விருத்தாச்சலத்தில் பட்டாணி கடையில் போலீசார் நடத்தி அதிரடி சோதனைகள் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்த கடைக்காரர் கைது செய்யப்பட்டார். 

✍️.கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி நகரில் அதிகாலை 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கோழியை திருடும் முயன்றதால் கைது.

✍️.கடலூரில் ரூ.43 லட்சம் வாடகை வாங்கி செலுத்தாததால் 2 கடைகளுக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகளுடன் ஊழியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு.

✍️.நெய்வேலி எடுத்த மந்தாரக்குப்பம் பழைய பேருந்து நிலையம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

✍️.கடலூர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம் இம்மாதம் 30ம் தேதி நடைபெறுகிறது.

✍️.கடலூர் துறைமுகம் வடக்கு நூலகத்தில் தினமும் ஒரு திருக்குறள் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் துவக்கி வைத்தார். 

✍️.மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார் கிராமத்தில் இருதரப்பினர் முதல் வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது. 

✍️.விருத்தாச்சலம் அடுத்த எருமனூரில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்த பெண் குண்டர் சட்டத்தில் கைது. அவர் மீது 41 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

✍️.கடலூர் மாவட்டத்தில் 1000 கடைகளை அடைத்து ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி. 

✍️.பண்ருட்டி அருகே குயிலாப்பாளையம் கிராமத்தில் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

✍️.பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

✍️.கடலூரில் டாஸ்மார்க் பணியாளர்களுக்கு ரூ.2000 சம்பள உயர்வு ஏற்றத்தக்கதாக அல்ல என டாஸ்மார்க் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் அறிக்கை. 

✍️.பண்ருட்டி அருகே உள்ள காட்டுக்கூடலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கண்காணிப்பு கேமராவை கல்வீசி உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

✍️.கடலூர் முதுநகர் அருகே அங்காளம்மன் காரைக்காடு பகுதியில் தரமான குடிநீர் குழாய் அமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. 

✍️. பண்ருட்டி அருகே youtube பார்த்து துப்பாக்கி தயாரித்து வேட்டையாட சென்ற 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

✍️.சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் 21 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

✍️.பெண்ணாடம் அருகே மாளிகை கோட்டம் சுமைதாங்கி பேருந்து நிலையம் அருகே கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்த 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

✍️.சேத்தியாத்தோப்பில் சோலார் மின் இணைப்புக்கு மின் அளவீட்டு கருவியை பொருத்த 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது. 

✍️.இளம் பெண்ணுக்கு காதலன் மூலம் பிறந்த பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு சிதம்பரம் தம்பதிக்கு விற்பனை செய்து டாக்டர் கைது.

✍️.ரூ.1 கோடிகள் கட்டப்பட்ட நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம் 15 ஆண்டுகளாக பயணம் பயன்பாட்டில் இல்லாததால் வாகன நிறுத்தும் இடமாக மாறியது.

✍️.கடலூர் திருவந்திபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 5 மின் விசிறிகளையும் மின் மோட்டார்களையும் திருடி சென்ற மர்ம நபர் போலீசார் தேடி வருகின்றனர்.

✍️.கடலூர் மஞ்சகுப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகாலர் கிரிக்கெட் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது மே 11ஆம் தேதி வரை நடைபெறும்.

என்றும் மக்கள் பணியில் நிலவன்  தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!