கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

 நாள்:- .05.04.2025 (சனிக்கிழமை)

👉.இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மாவட்டத்தில் நான்கு இடங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

👉.கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரே மாதத்தில் நடந்த 218 சாலை விபத்துகளில் 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 248 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

👉.பெண்ணாடத்தில் முன் விரோத தகராறு திருமண வீட்டுக்குள் புகுந்து மாப்பிள்ளை யின் உறவினர்களை தாக்கிய 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு. 

👉.விருத்தாச்சலம் காவலர்கள் ரோந்து பணியின்போது மணிமுக்தாறு பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டி மணல் திருடிய வாலிபரை கைது செய்தனர்.

👉.புதுச்சத்திரம் அடுத்த கீழ் பூவாணிக் குப்பத்தில் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் தம்பி இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

👉.விருத்தாச்சலம் ஆலடி ரோடு கருணாநிதி நகரில் திருமணம் ஆன நபர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருந்ததை கண்டித்த மனைவியை கடுமையாக தாக்கியதால் கைது செய்யப்பட்டார்.

👉.புதுவண்டிப்பாளையம் ராம முதலியார் தெருவில் உள்ள முத்துவாழி அம்மன் ஆலயத்தில் லட்ச தீப ஆராதனை விழா நேற்று நடைபெற்றது.

👉.பாதிரிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

👉.வாணாபுரம் அருகே அரசு பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் 19 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.

👉.கடலூர் மின்வாரியத்தினர் மின் விபத்துக்கள் ஏற்படாத வகையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.என மக்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

👉.சிதம்பரம் ஞானபிரகாசம் குளம் கீழக்கரை பகுதியில் தொழிலாளியை கத்தியால் குத்திய காய்கறி கடைக்காரர் போலீசார் கைது செய்தனர்.

👉.உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாரனோடை கிராமத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ.3¾ லட்சம் நகைகள் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

👉.ஆண்டிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மூதாட்டி குறுக்கே வந்ததால் பேருந்தில் உடனடி பிரேக் பிடித்ததால் கல்லூரி மாணவி இருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். 

👉.தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கடலூர் ஆயுதப்படையை காவலர் விஷ்ணு பிரசாந்த் 85 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

👉.கடலூர் முதுநகர் பனங்காட்டு காலனி சுனாமி நகரை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

👉.தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் மாவட்ட காவல் S.P அவர்களிடம் இரவு நேரம் கடை நடத்து அனுமதிக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர் மனு.

👉.வடலூர் போலீசார் ரோந்து பணியின்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த நபரை விசாரித்ததில் மோட்டார் சைக்கிளை திருடியவர் என அம்பலம்.

👉.கடலூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, ஸ்டார் ஷைன் பள்ளியின் ஆண்டு விழாவில் மழலைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

👉.கடலூர் எம்.புதூரில் ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் என்கவுண்டர் நடந்த இடத்தில் மேஜிஸ்ட்ரேட்டுகள் ஆய்வு செய்தனர்.

👉.ஸ்ரீ முஷ்ணம் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

👉.பண்ருட்டி அருகே காவலரை அறிவாளால் வெட்ட முயன்ற ரவுடி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேரும் தடுக்கி கீழே தவறி விழுந்து கைகால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!