அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கழக முதன்­மைச் செய­லா­ளர், மாண்புமிகு 

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் KN.நேரு அவர்கள் தலைமையில் கோவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மின்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், சுற்றுலாத்துறை அமைச்சர்  ஆர். ராஜேந்திரன், மாண்புமிகு ஆதிதிராவிடர் 

நலத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன், மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சகோதரி என்.கயல்விழி செல்வராஜ், மாண்புமிகு மக்களவை உறுப்பினர்கள் டி.எம். செல்வகணபதி, சகோதரர் கே.இ.பிரகாஷ் , கே.சுப்பராயன், கணபதி பி. ராஜ்குமார், கே.ஈஸ்வரசாமி, மாண்புமிகு மேலவை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஷ்குமார் , மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர். ஈ. ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!