கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

 நாள்:- .09.04.2025 (புதன்கிழமை)

👉.மீன்பிடி தடைக்காலம் இம்மாதம் 15-ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்கள் இன விருத்திக்காக மீன் பிடிக்க தடை மீறுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை. 

👉.கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 14 உதவி-ஆய்வாளர்கள் மாவட்டத்திற்கு உள்ளையே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

👉.மத்திய அரசின் வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மஞ்சக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

👉.கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சிதம்பரம் உட்பட 11 இடங்களில் சில்லறை பிரச்சினை தீர்வு காணும் வகையில் டிக்கெட் UPI முறையில் பெற ஏற்ப்பாடு.

👉.பண்ருட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் பயிற்சியாளர். 

👉.கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு. 

👉.வேப்பூரில் உள்ள பாத்திர கடையின் சுவற்றில் துளையிட்டு சீர்வரிசை பொருட்கள் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

👉.கடலூர் மாவட்டத்தில் முதல் கட்ட கண்டுபிடிப்பில் 26 குழந்தைகள் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

👉.விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நேற்று நடைபெற்றது இதில் ரூ.11½ லட்சம் காணிக்கை வசூல்.

👉.தமிழ்நாடு, கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம் இம்மாதம் 21 ம் தேதி முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!