கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

 நாள்:- .06.04.2025 (ஞாயிற்றுக்கிழமை)

👉.கடலூர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு அறையில் 'பிட்டு பேப்பர்' கிடைத்தது தொடர்பாக அறை கண்காணிப்பாளர் மாற்றம்.

👉.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

👉‌.கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே கீழவன்னியூரில் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் நிறுவன வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

👉.கடலூரில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

👉.கடலூர் புதிய பேருந்து நிலையத்தை கடலூர் சட்டப்பேரவை தொகுதிக்குள் அமைக்கவும், மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம். 

👉.குறிஞ்சிப்பாடி-விருத்தாச்சலம் வரை சாலையின் இரு புறங்களிலும் இறைச்சி கடைகள் திறந்து மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகாரிகள் ஆவனம்செய்ய கோரிக்கை.

👉.ஸ்ரீ முஷ்ணம் அருகே மேலப்பாளையம் ஊராட்சியில் முதல்வர் திறந்து வைத்த பால் கொள்முதல் மைய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என  மக்கள் கோரிக்கை. 

👉.தென்பெண்ணை ஆற்றில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து இரண்டு மாநில போலீசரும் விசாரிக்க மறுத்ததால் பரபரப்பு.

👉.பண்ருட்டி அடுத்த மருங்கூர் வடக்கு தெருவை சேர்ந்த நபர் மனைவியிடம் 5 பவுன் நகை ரூ.75 ஆயிரம் கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார்.

👉.மங்களம்பேட்டை, கட்டியநல்லூர் 2 ஊர்களில் 16, 17 வயது மதிக்கத்தக்க சிறுமிகளை திருமணம் செய்ததால் போக்சோ வழக்கில் இரு வாலிபர்கள் கைது.

👉.நெல்லிக்குப்பம் அருகே குற்ற வழக்கில் போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய போது மேம்பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்தவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

👉.தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 17-ம் தேதி நடைபெறுகிறது.

👉.கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வன்னியர்பாளையம் மேட்டு தெரு, சாம்பசிவம் நகர் பகுதிகளில் மாநகராட்சியின் மெத்தன போக்கால் ஊர் மக்களே நிதி திரட்டி சாலை அமைத்தனர்.

👉.விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் புது விளாங்குளம் கிராமத்தில் இரவு 12 மணி அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது. 

👉.வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து விருத்தாச்சலத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் இரயில் மரியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

👉.கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி திட்டம் 11-ம் தேதி துவங்குகிறது.

👉.பரங்கிப்பேட்டை அருகே அகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அமிர்தவல்லி உடனுறை ஆதி மூலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

👉.வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் ஊராட்சி  சிறுபாக்கம் பேருந்து நிலையத்தின் மீதும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு.

👉.கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு  வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. 

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!