கடலூரில் வழிப்பறி செய்தவர்களை கைது செய்ய முற்பட்ட இரண்டு காவலர்கள் படுகாயம் நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் இன்று 2.4.2025 தேதி அதிகாலையில்  விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 3 லாரி டிரைவர்களை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த வழக்கின் முக்கிய குற்றவாளியான புதுச்சேரியை சேர்ந்த விஜய் (எ) மொட்டை விஜய் என்பவரை கைது செய்ய முற்பட்டபோது இரண்டு காவலர்களை கத்தியால் வெட்டினார்.  தற்காப்பிற்காக காவல் ஆய்வாளர்  துப்பாக்கியால் சுட்டதில் எதிரி விஜய் உயிரிழந்தார். 

விஜய் மீது புதுவை மாநிலம்  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை, வழிபறி, கொடிய ஆயுதம் வைத்திருத்தல் போன்ற 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் தலைமை காவலர்கள். கோபி, கணபதி ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!