இராஜபாளையம் தொகுதியில் சிறப்பு நிதி உதவி திட்டத்தின்கீழ் ஊர்ப்புற நூலக கட்டிடம் மற்றும் கிளை நூலகத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறப்பு!


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் பொதுநூலக இயக்ககம் விருதுநகர் மாவட்டம் சிறப்பு நிதி உதவி திட்டத்தின்கீழ் செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலி பகுதியில் அமைக்கப்பட்ட ஊர்ப்புற நூலகக்கட்டிடத்தையும்  மற்றும் 


சேத்தூர் பேரூராட்சி அரசு பூங்கா அருகில் அமைக்கப்பட்ட   கிளை நூலகத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் 


S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் குத்து விளக்கேற்றி சிறப்பித்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி சேர்மன்கள். ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர். கண்ணன், செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர். இளங்கோவன், துணை 


சேர்மன். காளீஸ்வரி மாரிச்செல்வம், ஒன்றிய பிரதிநிதி. மகேஷ்வர பாண்டியன், கவுன்சிலர்கள். மாரிமுத்து,  ஆறுமுக சுந்தரி, வார்டு செயலாளர். முத்துராஜ், பால்ராஜ் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!