ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமத்துவ உறுதிமொழி!


கடலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேதகார் அவர்க ளுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும். மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என உறுதிமொழி ஏற்றனர்.  கூடுதல் காவல் கண்காணிப்பாளர். ரகுபதி, துணை காவல் கண்காணிப்பார்கள் .பார்த்தீபன், அப்பாண்டைராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர். குருமூர்த்தி, காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள்  மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!