கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

 நாள்:- .02.04.2025 (புதன்கிழமை)

👉.தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு 10 நாள் விடுமுறை. நாளை முதல் 12-ம் தேதி வரை துவங்குகிறது கோடை மழை வானிலை மையம் தகவல்.

👉.ஸ்ரீ முஷ்ணத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி மர்மமான முறையில் இறந்ததை கண்டித்து விண்மீன் பார்வையற்றோர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

👉.கடலூர் அருகே சிங்கிரிகுடி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் 85 வயது மூதாட்டி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

👉.விருத்தாச்சலம் பூதாமூர் மணிமுக்தாறு பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் 4 மூட்டைகளில் மணலை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

👉.திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் 500 ரூபாய் கள்ள நோட்டு அடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது. முக்கிய குற்றவாளி அயல்நாட்டில் இருப்பதாக தகவல்.

👉.கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள 4,462 கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் கட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல்.

👉.நெல்லிக்குப்பம் அடுத்த மேல் பட்டாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே லாரியை வழிமறித்து ரகளை ஈடுபட்ட சிறுவர் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

👉.சென்னையை சேர்ந்த 5 நபர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்ற போது கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே கார் விபத்துக்குள்ளானதில் 5 நபர்கள் படுகாயம் அடைந்தனர்.

👉.விருத்தாச்சலத்தில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஒட்டிய நபருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாருடன் குடிமகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

👉.பாதிரிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. 

👉.நெய்வேலி தெர்மல் போலீசார் கடந்த மாதம் 23-ம் தேதி ரோந்து பணியின் பொழுது கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்தனர். அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

👉.சிதம்பரம் பகுதியில் உள்ள மின்மாற்றி களில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பிகளை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

👉.விருத்தாச்சலம் அருகே பெரிய கண்டியாங்குப்பம் கிழக்குத் தெருவில் நண்பர்களுடனான வாய் தகராறில் பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது.

👉.குறிஞ்சிப்பாடி அருகே ஆடுர் அகரம் அம்மன் கோயில் தெருவில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.

👉.விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து, பச்சைபயிர் நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல்.

👉.விருத்தாச்சலம் அருகே ஆலடி காலனி நடுத்தெருவில் உள்ள கங்கை மாரியம்மன் கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

👉.வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் ஜாவன்பவன் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

👉.கடலூர் அரசு மாதிரி பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

👉.கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் உடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என காவல் S.P உத்தரவு.

👉.தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் ஒன்றிப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9-ம் தேதி போக்குவரத்து அலுவலகங்களில் கருப்பு ஆடை அணிந்து பணியாற்ற முடிவு.

👉.திட்டக்குடி அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பில் நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

👉.கடலூர் புது வண்டிப்பாளையத்தில் பிரசத்தி பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது. 

👉.தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

👉.காடாம்புலியூர் செம்மேடு கெடிலம் ஆற்று பகுதியில் ஆற்று மணலை திருடி மினி லாரியில் ஏற்றிச் சென்ற நபர்களை போலீசார் கைது செய்தனர். 

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!