கடலூர் - ஆபத்தானபுரம் மங்கையர்க்கரசி திருமண மண்டபம் அருகில் வாகன தணிக்கையில் பிடிப்பட்ட போதைப்பொருள் குறித்து ஜெயக்குமார் ஐபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறபித்த உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் CP.ராதாகிருஷ்ணன் நெய்வேலி உட்கோட்டம் அவர்களின் மேற்பார்வையில் வடலூர் காவல் ஆய்வாளர் K. உதயக்குமார் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர். தவச்செல்வம், இராஜா, உதவி ஆய்வாளர். அறிவழகன் மற்றும் போலீசார் 17.04.2025 ம் தேதி இரவு ஆபத்தானபுரம் மங்கையர்கரசி திருமண மண்டபம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த TN 49 BE 6946 என்ற பதிவெண் கொண்ட HYUNDAI CRETA வெள்ளைநிற காரை நிறுத்தி சோதனை செய்ததில் போதை பொருட்கள் கடத்தி வந்த எதிரிகள் 1. தண்ராஜ்பெரியால் வயது 26, த/பெ கைலாஷ்குமார், பாக்ராரோடு, ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் 2. திலிப்சிங் வயது 20. த/பெ ஜலாராம், அவுலூச் கிராமம்,
ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் குட்கா வியாபாரிகள் 3. கணேசன் வயது 56, த/பெ. நடராஜன், அண்ணாநகர், மந்தாரக்குப்பம், நெய்வேலி, 4. ராம்குமார் வயது 37, த/பெ ராமலிங்கம், GP நகர், வடலூர், குறிஞ்சிப்பாடி 5. வேல்முருகன் வயது 59 த/பெ காலைச்சாமி, பாட்டைவீதி ஆபத்தாணபுரம், வடலூர் குறிஞ்சிப்பாடி ஆகியவர்களை கைது செய்தும் பெங்களுாரில் இருந்து 29 வெள்ளை நிற சாக்குமூட்டையில் கடத்தி வந்த சுமார் 348 கிலோ போதை குட்கா பொருட்களை கடத்தி வந்த கார் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பொருட்களை பிடித்த காவல் துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக