தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழா பொதுக்கூட்டம்!


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு கார்த்திக் சீனிவாஸ். அவர்களின் தலைமையிலும். மன்சூர் அலிகான். CBZ கார்த்திக் ஆகியோரின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்‌ வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களை  கட்சியில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் என்னோடு கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான ஜெகதீச பாண்டியன் அவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன்.அவர்களும் பங்கேற்றனர்.நிகழ்வை நெப்போலியன், கரு.பிரபாகரன், ஒருங்கிணைத்தனர். தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்த உறவுகள் அனைவரையும் வருக! வருக!! என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வரவேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!