பனப்பாக்கம் பேரூர் கழக திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பெ. வடிவேலு பங்கேற்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் கோடையின் வெப்பத்தில் இருந்து மக்களை காத்து தாகம் தணிக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின்
அறிவுறுத்தலின்படி, பனப்பாக்கம் பேரூர் தி.மு.க சார்பில், பேரூர் கழக செயலாளர் சீனிவாசன் அவர்கள் தலைமையில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக அழைப்பாளர்களாக, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய
பெருந்தலைவருமான பெ.வடிவேலு மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சி மன்றத் தலைவர். கவிதா சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், கிரிணிபழம், தர்பூசணி, வெள்ளரிக்காய், மற்றும் குளிர்பானங்களை வழங்கினர். இதில், மாவட்ட நெசவாளர் அணி
அமைப்பாளர் V.S.A.குலோத்துங்கன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் N.K.சரவணன், SGB.ராமு, MCD.பாலசுந்தரம், ரோஸ், J.ரேணுகோபால், சாரதி, பாலமுருகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்





கருத்துகள்
கருத்துரையிடுக