குளித்தலை சட்டமன்ற இளைஞர் அணி திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!


கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி கழக இளைஞர் அணி சார்பில், இந்தித் திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், மக்களவை தொகுதிகள் சீரமைப்பில் அநீதி இழைத்திடும் ஒன்றிய அரசை கண்டித்து, மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் தோகைமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி மற்றும் மூத்த ஊடகவியலாளர் தி.செந்தில்வேல், தலைமை கழக இளம் பேச்சாளர். குணஸ்ரீ அவர்கள் சிறப்புரையாற்றினர். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!