கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

👉.அரிசிபெரியாங்குப்பம் அடுத்த குமார பேட்டை பகுதியில் தடை இன்றி குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்.

👉.விருத்தாச்சலம் அருகே அரசு பள்ளி சமையல் அறையில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் சத்துணவு பொறுப்பாளர், சமையலர் உள்ளிட்ட 3 பேர் படுகாயம்.

👉.கடலூர் மாநகர ஆளுங்கட்சி சார்பில் கடலூர் முதுநகரில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவினை மேயர் துவங்கி வைத்தார்.

👉.தென்னம்பாக்கம் பகுதியில்  இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

👉.விருத்தாச்சலம் அருகே கிராமத்தில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தன் சித்தப்பா அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உடந்தையாக இருந்த தாய் என மூவர் போக்சோ வில் கைது. 

👉.கிறிஸ்தவர்களின் பெரிய விழாவினை யொட்டி தேவாலயங்களில் கிறிஸ்தவர்களுக்கு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று புனித வெள்ளி அனுசரிப்பு.

👉.விருத்தாச்சலம் அருகே உள்ள கம்மாபுரத்தில் இருந்து 20 பேர் வந்த வாகனம் புவனகிரி அருகே விபத்தில் தலைகீழாக கவிழ்ந்ததில் 20 பேர் படுகாயம்.

👉.கடலூர் புதுநகர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மீது அரசு பேருந்து மோதியதில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

👉.கடலூரில் கத்திரிக்காய் விலையை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.5-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வேதனை. 

👉.சிதம்பரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்த புது மாப்பிள்ளை தன் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

👉.தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் செய்ய திட்டம்.

👉.திட்டக்குடியைச் சேர்ந்த குடும்பத்தினர் காரில் ராமநத்தம் சென்ற போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி கார் தீ பிடித்து எரிந்ததில் 4 பேர் உயிர் தப்பினர்.

👉.சேத்தியாத்தோப்பு பகுதியில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது. அவரிடம் விசாரித்ததில் 10-க்கும் மேலாக திருடியதாக வாக்குமூலம்.

👉.கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. 

👉.சட்டசபையில் நடைபெற்ற தீர்மானத்தில் வடலூர் முக்கிய விழா நடைபெறும் நாட்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்வதாக அமைச்சர் கூறினார்.

👉.விருத்தாச்சலம் அருகே மகனுக்கு திருமணம் நடத்தி வைக்க இருந்த நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த தந்தையின் உடலின் முன்பு காதலியை திருமணம் செய்த மகன். 

👉.பண்ருட்டி அருகே உள்ள உறையூர் கிராமத்தினர் வீட்டுமனை பட்டா வழங்க கோரி கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்புப் போராட்டம் ஈடுபடும் முயற்சி. 

👉.நெய்வேலி என்.எல்.சி.யில் தொழிற்சங்க தேர்தலுக்கு வேட்பு மனு பரிசீலனை முடிந்து 6 தொழிற்சங்கங்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

👉.வன்னியர்ப்பாளையத்தில் போலீஸ் ஏட்டு அவர் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய மின் பாதை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்.

என்றும் மக்கள் பணியில்  நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!