கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!
நாள்:- .04.04.2025 (வெள்ளிக்கிழமை)
👉.கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
👉.சேத்தியாத்தோப்பு அடுத்த கோவிந்த நல்லூர் கிராமத்தில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பொழுது இடி மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார்.
👉.கடலூரில் மத்திய மாநில ஓய்வூதியர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
👉.பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
👉.சேத்தியாதோப்பு அருகே அரசு பேருந்து வாய்க்கால் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் நின்றது காப்பாற்ற கோரி பயணிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு.
👉.நெய்வேலி 26 வது வட்டம் சுந்தரர் தெருவை சேர்ந்த என்.எல்.சி தொழிலாளி திருவெண்ணைநல்லூர் அடுத்த பேரங்கியூர் அருகே கார் விபத்தில் அவரது மனைவி உயிரிழந்தார்.
👉.பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2000 ஆயிரம் கோடி கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
👉.கடலூர் ஒன்றியத்துக்கு பாலில் கலப்படம் உள்ளதா என கண்டறியும் கருவி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
👉.கடலூர் மாவட்டத்தில் தலா ஒரு உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும் என அமைச்சர் தகவல்.
👉.கடலூர் அடுத்த புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் ரூ.11 கோடி செலவில் அமைக்கப்படும்.
👉.கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து சிதம்பரத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று சட்டசபையில் அ.தி.மு.க உறுப்பினர் வலியுறுத்தினார்.
👉.கடலூர் மாவட்டத்தில் புதியதாக வருவாய் குறுவட்டங்கள் உருவாக்க வேண்டும் என அமைச்சர் சட்டசபையில் தகவல்.
👉.கடலூரில் காவலர்களால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடி உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
👉.பண்ருட்டி பலா, முந்திரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
👉.கடலூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
👉.ம.புளியங்குடி பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு ஆட்சியர் அலுவலகத்திற்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
👉.கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 5¾ லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
👉.தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் கடல் சார்ந்த பொருட்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி வகுப்பு வருகிற 15-ம் தேதி துவங்குகிறது.
👉.சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை ராஜா நகர் பகுதியில் கார் டிக்கியில் வைத்திருந்த நான்கு பவுன் நகையை திருடி சென்ற ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
👉.கடலூர் கம்மியம்பேட்டையில் குப்பை கிடங்கு இருந்த இடத்தை தூய்மைப்படுத்தி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு 15 வது மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
👉.விருத்தாச்சலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் உள்ள பாசியம்மன், பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடத்தக்கூடாது என கோட்டாட்சியர் உத்தரவு.
👉.கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
👉.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழக அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயத்தில் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என போட்டா ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக