புதுச்சேரி - சிவசுப்பிரமணி சுவாமி கோவில் செடல் உற்சவத் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு!


கடலுார் சாலையில் நாளை 10ம் தேதி போக்குவரத்து மாற்றம் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் சிவசுப்புரமணிய சுவாமி கோவில் செடல் உற்சவத் திருவிழா நாளை 10ம் தேதி நடக்கிறது.இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நாளை 10ம் தேதி காலை 

10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புதுச்சேரியிலிருந்து கடலுார் செல்லும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், புதிய பைபாஸ் சாலை , கன்னியகோவில் முள்ளோடை வழியே கடலுார் செல்ல வேண்டும். அதேபோல், கடலுாரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கன்னியகோவில் அருகே புதிய பைபாஸ் சாலை , அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம் சாலை வழியாக செல்ல வேண்டும்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!