கேப்டன் கர்தீப் சிங், வெலிங்டன், ஊட்டி என்பவர் தலைமையில் Bike Rally பயணமாக கரூர் வருகை!
சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தார்களின் குறைபாடுகளை களைய தமிழ்நாடு முழுவதும் மேற்படி சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரியும் 08 இராணுவ வீரர்கள் அடங்கிய Bike Rally பயணம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று 25.04.2025 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேப்டன் கர்தீப் சிங், வெலிங்டன், ஊட்டி என்பவர் தலைமையில் Bike Rally பயணமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த 08 இராணுவ வீரர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா, IPS., அவர்களின் உத்தரவுப்படி கரூர் மாவட்ட எல்லையான வைரமடையில் காவல்துறையினரால் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்பு ஊர்வலமாக கரூர் நகர காவல் நிலைய சரகத்திற்கு உட்பட் முக்கிய வீதி வழியாக பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்து, மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பதாரிடம் குறைகளை கேட்டறிந்தார்கள்.
பின்பு, மேற்படி கேப்டன் கர்தீப் சிங், வெலிங்டன், ஊட்டி என்பவர் தலைமையில் Bike Rally குழுவினர் கரூர் மாவட்ட காவல் அலுவலகம் வருகை புரிந்தவர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.பெரோஸ்கான் அப்துல்லா, IPS., அவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து, அவர்களுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். ஜெயசந்திரன், கரூர் மாவட்ட முன்னாள் இராணுவ வீரர்களின் நலச்சங்க மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக