புதுச்சேரி இலாஸ்பேட் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகத்தில் நடைபெற்ற ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாசிப்பு கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை!
புதுச்சேரி இலாஸ்பேட் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத்தின் அருகாமையில் புதிய வாசிப்பு கூடம் கட்டுவதற்கு ரூ.80 லட்சம் மதிப்பில் அரசானை பெறப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை எனது தலைமையிலும், காலாப்பேட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. P.M.L. கல்யாணசுந்தரம் அவர்கள் முன்னிலையிலும், இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தாகூர் கலை கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் உடன் கல்லூரியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். முன்னதாக கல்லூரியில் உள்ள தாகூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது.
மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக