ராஜபாளையம் தொகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் காமராஜர் நகரில் நிழற்குடையும், சொக்கநாநன்புத்தூர் ஊராட்சியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் இன்று (20.04.2025) காலை இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2024-2025) 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜர் நகரில் அமைக்கப்பட்ட நிழற்குடையும்
சொக்கநாநன்புத்தூர் ஊராட்சியில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக்கட்டிடத்தையும் பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து
சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் குத்தாலம் நினைவு கபாடிக்குழு மற்றும் விண்மீன் கிரிக்கெட் கிளப் இணைந்து நடத்தும் 14 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபாடிப் போட்டியை MLA அவர்கள் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு முதல்
பரிசான 25,000 ரூபாயையும் வெற்றி கோப்பையும் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் கிளைச்செயலாளர்கள் சின்னதம்பி தங்கப்பன் அமுரசன் சீதாராமன் வைரவன் ராணி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கபாடி வீரர்கள் கலந்து கொண்டனர்.









கருத்துகள்
கருத்துரையிடுக