வயலூரில் வாகன தணிக்கையில் பிடிப்பட்ட 26 வெள்ளை சாக்கு மூட்டையில் 390 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிப்பு!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை  கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில் விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன் அவர்கள் மேற்பார்வையில், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர். கவிதா, காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர்  தவசெல்வம், விருதாச்சலம் உதவி ஆய்வாளர் சந்துரு மற்றும் 

போலீசார் விருத்தாச்சலம் வயலூரில் வாகன தணிக்கையில் இருந்தபோது, வந்த Kia கார் பதிவெண் TN 47 BY 6464 என்ற வெள்ளை நிற காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்று நிறுத்திவிட்டு போதைப்பொருள் கடத்தி வந்த எதிரி தப்பி ஓடி விட்டார். பின்னர் காரை சோதனை செய்தபோது 26 வெள்ளை சாக்கு மூட்டையில் 390 கிலோ போதை குட்கா பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 5,85,000 / ஆகும். போதை குட்கா பொருளை கடத்தி வந்த கார் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!