பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் வாகனத்தை தணிக்கையின் போது ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள வெள்ளை சாக்கு மூட்டையில் 258 கிலோ போதை குட்கா பொருட்கள் கண்டுபிடிப்பு!

!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . S. ஜெயக்குமார் IPS அவர்கள் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர். ராஜா அவர்கள் மேற்பார்வையில், பண்ருட்டி உட்கோட்ட தனிப்படை  உதவி ஆய்வாளர். தங்கவேலு, உதவி ஆய்வாளர். பிரேம்குமார் மற்றும் போலீசார் இன்று 20.4.25 தேதி அதிகாலை பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் வாகன தணிக்கையில் இருந்தபோது வந்த கார் பதிவெண் GJ 27 DB 0023  மற்றும் PY 02 Q 0532  ஆகிய இரண்டு  கார்களை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றவர்களை மடக்கி பிடித்து  போதைப்பொருள் கடத்தி வந்த எதிரிகள் 1. அப்துல்ரஷித் வயது 46 த/பெ ரகுமான், சுல்தான்பேட்டை தெரு, நெல்லிக்குப்பம், 2. ரமேஷ் வயது 24 த/பெ கண்ணாராம், புரோச்புறா, ராஜஸ்தான், 3. ஹரிஷ் வயது 26 த/பெ கேசராம், ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான், 4. சங்கர்லால் வயது 27 த/பெ ராஜாராம், ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் ஆகியோர்களை மடக்கி பிடித்தும் பின்னர் கார்களை 

சோதனை செய்தபோது வெள்ளை சாக்கு மூட்டையில் 258 கிலோ போதை குட்கா பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 3 லட்சம். போதை குட்கா பொருட்களை கடத்தி வந்த கார்கள் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பொருட்களை பிடித்த காவல்துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!