கோவை - வடக்கு மண்டலம் பகுதியில் ரூ. 21.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலக கட்டிடத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைப்பு!


கோவை மாவட்டம் அடுத்த 2 ஆண்டுகளில், கல்லூரி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணி வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 1க்குட்பட்ட பகுதியில்,  ரூ.21.00 லட்சம் மதிப்பீட்டில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-2024ன் கீழ் கட்டப்பட்ட நூலக கட்டிடத்தை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., கோவை மாநகராட்சி மேயர் திருமதி ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!