பண்ருட்டி அருகே பைக்கில் ஆடு திருடிய 2 இளஞ்சிறார்கள் வாகன தணிக்கையில் பிடிப்பட்டனர்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் பண்ருட்டி உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. தங்கவேல் காவலர்கள் ஆனந்த், ராஜகவி , மகேஷ், பார்த்திபன் ஆகிய. குற்ற தடுப்பு நடவடிக்கையாக சென்னை - கும்பகோணம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது போலீசாரை கண்டவுடன் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர்களை மந்தாரக்குப்பம் அருகே மடக்கி பிடித்து சோதனை செய்தபோது YAMAHA MT பதிவெண் TN31CK 0262 வாகனத்தில் 2 ஆடுகளை திருடி வந்த 16 வயது இளஞ்சிறார்கள் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் வடக்கு மேலூர் செல்வராஜ் என்பவரின் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை திருடியதாக ஒப்புக்கொண்டவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்பேரில் மோட்டார் சைக்கிள், 2 ஆடுகள் பறிமுதல் செய்து நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பேரில் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு ரோந்து பணியில் ஆடு திருடிய திருடர்களை பிடித்த உதவி ஆய்வாளர் திரு தங்கவேல் மற்றும் காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக