ராஜபாளையத்தில் 153 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான அனுமதி கடிதம் மற்றும் 50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அடையாள அட்டை வழங்கிய அமைச்சர். கே.கே.எஸ். எஸ் .ஆர். ராமச்சந்திரன்!
விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் தொகுதியில் P.S.குமாரசாமிராஜா திருமண மண்டபத்தில் இன்று (13.04.2025) காலை
குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட கிராமப்பகுதிகளை சார்ந்த 153 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லத்திட்டத்தில் வீடு கட்டுவதற்கான அனுமதி கடிதத்தத்தையும் 50 பயனாளிக்கு புதிய குடும்ப அடையாள அட்டையையும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அவர்கள் திட்ட இயக்குனர் தண்டாபாணி அவர்கள் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிறப்பான பணியையும் திட்டங்களையும் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார் , அதில் மிகச்சிறப்பான திட்டமான கலைஞர் கனவு இல்லத்திட்டத்திற்காக அனுமதி கடிதத்தத்தை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினார் மேலும் தமிழ்நாட்டில் நிலம் இல்லாத ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அவர்கள் வீடு கட்டுவதற்கு ஏதுவாக கலைஞர் கனவு திட்டம் மூலம் வீடும் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு இனிவரும் ஆண்டில் தமிழ்நாடு குடிசை இல்லா தமிழ்நாடாக திகழும் இவை அனைத்திற்கும் சொந்தகாரர் உங்களின் குடும்பத்தில் ஒருவரான நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தான் எனக்கூறினார்.
இந்நிகழ்வில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார்.,MP அவர்கள் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர். 'பாளையத்து பாண்டியர்'. S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள், வாரியத்துணைத் தலைவர் ராசாஅருண்மொழி அவர்கள் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் அவர்கள்
ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசௌந்தரி அவர்கள் தனுஷ் M.குமார்.,Ex.MP அவர்கள் அவர்கள் பொறியாளர் கதிரவன் முன்னாள் சேர்மன் சிங்கராஜ் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் சேத்தூர் சேர்மன் பாலசுப்ரமணியன் துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி Ex.துணை சேர்மன் துரைகற்பகராஜ் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் பணியாளர்கள் கிளர்க்கள் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.








கருத்துகள்
கருத்துரையிடுக