ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாள் விழா, தேர்தல் அங்கீகார வெற்றி விழா மற்றும் சமத்துவ அணிவகுப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிபேட்டை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் 135 வது பிறந்த தினம், தேர்தல் அங்கீகார வெற்றி விழா, சமத்துவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணி வகுப்பிற்கு ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான ரமேஷ் கர்ணா,. மாவட்ட செயலாளர் பிரபுதாஸ், மாவட்ட செயலாளர் இளையநிலா ஆகியோர் தலைமைத்   தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக  மேலிட பொறுப்பாளர் அப்துல் நாசர் அவர்கள் பங்கேற்று சமத்துவ அணிவகுப்பினை துவக்கி வைத்து அணி வகுப்பில் கலந்து கொண்டார்கள். இந்த அணி வகுப்பு நவல்பூர் பஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, விடுதலை சிறுத்தைகளுக்கு வீரவணக்கம் என கோஷமிட்ட வாரு பேரணி நலச் சென்றனர்.

மேலும் இதில் ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் மாந்தங்கள் ராஜா, மண்டல துணைச் செயலாளர் தமிழ், மாவட்டச் செய்தி தொடர்பாளர் சசிகுமார், மகளிர் அணியினர் வேப்பூர் ஜீவிதா , வினோதினி, ஒன்றிய செயலாளர் மேல்பாக்கம் நரேஷ், ஆற்காடு நகர  ராஜன் ,வாலாஜா நகர செயலாளர் மேஷாக் மூர்த்தி,  ஜெயவேல் தினேஷ் ஆகியோர் பங்கேற்று  முத்துக்கடை பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி  அம்பேத்கர் வாழ்க என கோஷமிட்டனர்  முடிவில் ராணிப்பேட்டை நகர செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!