ராஜபாளையம் புத்தூர் ஊராட்சியில் NIA ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 17- ஆம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டியை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைப்பு!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் (23.03.2025) புத்தூர் ஊராட்சியில் NIA ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 17ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டியை S.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் தொடக்கிவைத்து முதல் பரிசு ரூபாய் 25,000 வழங்கினார்.
அதனை தொடர்ந்து 11 மணியளவில் இராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கான விருதுநகர் மாவட்ட அளாவிலான டேக்வண்டா (Taekwondo Champion 2025) போட்டியை MLA அவர்கள் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி விளையாட்டு துறையில் சாதித்து நமது ஊர்க்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் துணை முதலமைச்சர் அவர்களும் கல்வியையும் விளையாட்டுத்துறையையும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டு செல்கின்றனர் என கூறினார்.
அதனைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் சங்கரபாண்டியபுரம் தெருவில் அமைந்துள்ள முத்துக்கிருஷ்ணன் என்பவரின் தறியில் MLA அவர்கள் ஆய்வு செய்து நெசவாளர், கைத்தறித்துறை சார்ந்த கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது நெசவாளர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த MLA அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் கைத்தறித்துறை மானியக்கோரிக்கையில் குரலெழுப்பபடும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.
இந்நிகழ்வில் நகராட்சி சேர்பன் பவித்ரா ஷியாம், நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, நகர்மன்ற உறுப்பினர்கள் குருசாமி, ரோகினி நாகேஸ்வரன், ஷாலினி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரகுமார், நகர துணை செயலாளர் இக்சாஸ் இப்ராகிம், நகர
பொருளாளர் புதியராஜ், கிளை கழக செயலாளர்கள் பாலகணேஷ், பால்ராஜ், கருப்பையா, குமார், 28வது வார்டு செயலாளர் பழனிகுரு மற்றும் விளையாட்டு வீரர்கள், டேக்வண்டா நிர்வாகிகள் குழந்தைகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.








கருத்துகள்
கருத்துரையிடுக