கடலூர் மாவட்ட பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் சார்பில் மகளிர் தின விழா ஜெயக்குமார் IPS பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மகளிர் தின விழா SRJ காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அரசு மருத்துவர். டாக்டர் பத்மாவதி, அரசு வழக்கறிஞர்கள். வளர்மதி, ஜெயபாரதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமை தாங்கி பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேசுகையில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்கள் நிலையில் தற்போது பெண்கள் சிறப்பான முன்னேற்றங்களை அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு இவ்விழாவே சிறந்த உதாரணமாகும். பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நமது காவல் சகோதரிகள் பங்களிப்பு உன்னதமானது என வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் பெண் காவல் ஆய்வாளர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக