நிலவன் தினசரி செய்தி நாளிதழில் இருந்து..

 நாள்:- 19.03.2025 (புதன்கிழமை)

👉.மே மாதம் 1-ம் தேதி முதல் சிதம்பரம் இரயில் நிலையத்திலிருந்து 5 மினி பேருந்துகள் உரிமம் பெற்று மே 1-ம் தேதி முதல் மினி பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்.

👉.பண்ருட்டி அடுத்த நெல்லடிக்குப்பம் வடக்கு தெருவில் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபரை கத்தியால் தலையில் வெட்டிய 4 பேர் கைது செய்தனர்.

👉.சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையில் சாப்ட்வேர் என்ஜினியர் வீட்டில் 17½  லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

👉.மதுரையில் நடக்கும் 24-வது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர்.

👉.நெய்வேலி தெர்மல் போலீசார் ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

👉.பரங்கிப்பேட்டை அருகே சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவை உடைத்து ஊழியரை தாக்கிய 6 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

👉.புவனகிரி அடுத்த பி.முட்லூர் பகுதியில் இறால் பண்ணையை அகற்ற வந்த அதிகாரிகளை அதன் உரிமையாளர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

👉.சிதம்பரம் அண்ணாமலைநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 நாய்கள். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

👉.கடலூரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

👉.பண்ருட்டி பெண்ணாடம் பகுதியில் ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

👉.கடலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை.

👉.17 வழித்தடங்கள் மினி பேருந்து ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.மேலும் 44 வழித்தடங்களில் பேருந்து இயக்க 151 பேர் போட்டி போடுவதால் குழுக்கள் முறையில் தேர்வு. 

👉.பெண்ணாடம் திருமலை அகரம் கிராமத்தில் முன் விரோதம் காரணமாக கத்தியால் காதையை வெட்டி நபரை போலீசார் கைது செய்தனர்.

👉. பண்ருட்டி அருகே உள்ள பண்டரக்கோட்டையில் செல்போனில் நிர்வாண படம் எடுத்து மிரட்டி பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவனம் மேலாளர் கைது. 

👉.விருத்தாச்சலம் திரு.வி.க நகர் திருவள்ளுவர் தெருவில் சேர்ந்த பா.ம.க மாவட்ட செயலாளரின் மீது முகநூலில் அவதூறாக பதிவு செய்து 5 நபரை போலீசார் கைது செய்தனர்.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!