நிலவன்தினசரி செய்தி நாளிதழில் இருந்து!
நாள்:- 15.03.2025 (சனிக்கிழம
🎂.சிதம்பரம் அருகே தெம்மூர் கிராமத்தில் சாமி ஊர்வலத்தில் இரண்டு கிராம இளைஞர்கள் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டதில் பதட்டம் ஏற்பட்டது.
🎂.கடலூர் தேவனாம்பட்டினம் மாசி மகத்தில் தொடர்ந்து 2 நாட்களாக அன்னதானம் வழங்கப்பட்டதையொட்டி மகத்தின் இறுதி நாளான நேற்றும் ஏராளமான அன்னதானம் வழங்கினர்.
🎂.கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் மற்றும் முதுநகர் மணிக்கூண்டு பேருந்து நிலையம் என 2 இடங்களில் தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள் LED திரையில் ஒளிபரப்பப்பட்டது.
🎂.சென்னையில் இருந்து கடலூருக்கு உரிய ஆவணம் இல்லாமல் பேருந்தில் கொண்டு வந்த ரூ.25 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
🎂.தமிழக காவல்துறை காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் போலீசருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
🎂.பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர்.
🎂.கடலூர் மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறைதீர்க்கும் முகாம் கடலூரில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
🎂.சிதம்பரம் அருகே உள்ள வல்லத்துரை கிராமத்தில் கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உடன் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
🎂.கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
🎂.மாசி மகத்தையொட்டி கடலூர் துறைமுகம் மீன்பிடி தளத்தில் தெப்ப உற்சவம் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
🎂.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தலைமை அலுவலகத்திற்கு வந்த இ-மெயிலால் பரபரப்பு.
🎂.கடலூர் முதுநகரில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த போது தீப்பிடித்து எரிந்த டேங்கர் லாரி கிரேன் மூலம் அகற்றப்பட்டது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.
🎂.விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
🎂.வண்ணங்களின் திருவிழா என்று போற்றப்படும் 'ஹோலி பண்டிகையான' நேற்று கடலூரில் இருக்கும் வட மாநிலத்தவர்கள் வண்ணப்பொடி தூவி கொண்டாடினர்.
🎂.விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையம் நிலையத்தில் எண்ணெய் வித்துப் பயிர்களில் உழவர்களுக்கான பங்கேற்பு முறை தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
🎂.புதுப்பேட்டை அருகே குடுமியான் குப்பத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
🎂.ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தில் குடும்ப தகராறில் பெண்ணை கொலை வெறியுடன் தாக்கிய அண்ணன், தம்பி கைது.
🎂.காட்டுமன்னார்க்கோவில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியின்போது மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக