கடலூர் மாவட்ட செய்தி துளிகள் !
நாள்:- 27.03.2025 (வியாழக்கிழமை)
👉.கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மேயர் அறிவுறுத்தல்.
👉.தெலுங்கானா மாநிலம் கட்சிக்குடாவில் இருந்து மதுரை சிறப்பு இரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கலை சேர்ந்த இளைஞர் கைது.
👉.ஸ்ரீ முஷ்ணத்தில் நகை தொழிலாளிடம் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.22¼ லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது.
👉.கடலூர் அருகே டி.புதூரை சேர்ந்த மாணவர்கள் இரட்டை கொலை வழக்கில் கைதான மூன்று வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
👉.ராமநத்தம் காவலர்கள் பட்டாகுறிச்சி பகுதியில் ரோந்து பணியின் போது வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.
👉.திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட இளமங்கலம் பகுதியில் மது போதையில் வந்ததை தாய் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
👉.கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 3-வது புத்தகத் திருவிழாவை கடந்த 5 நாட்களில் 1 லட்சம் பேர் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.
👉.சிதம்பரம் நகராட்சியோடு லால்புறம் ஊராட்சி மற்றும் 7 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம்.
👉.கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 85 கிலோ எடை பிரிவில் கடலூர் ஆயுதப்படை காவலர் வெள்ளி பதக்கம் வென்றார்.
👉.பண்ருட்டி எல்.என்.புரம் பாரதி நகர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
👉.கடலூர் மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 1945 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தகவல்.
👉.கடலூர் மாவட்டம் கம்மாபுரம் பகுதியில் விளையாட்டாக கழுத்தில் தூக்குமாட்டிய பெண் புடவை இறுக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.
👉.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 4 கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக