கடலூர் - பண்ருட்டி போக்குவரத்து பிரிவு காவலர்களுக்கு தெர்மாகோல் தொப்பி மற்றும் பழச்சாறு வழங்கி காவல் துணை கண்காணிப்பாளர். ராஜா!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்திரவின்பேரில் கோடை வெயில் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு பண்ருட்டி போக்குவரத்து பிரிவு காவல் ஆளிநர்களுக்கு 26.03.2025 இன்று தெர்மாகோல் தொப்பி மற்றும் பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சியில் பண்ருட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு வழங்கினார்.
உடன் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர். பரமேஸ்வர பத்மநாபன், உதவி ஆய்வாளர்கள். மகேந்திரன், தேவநாதன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக