இராஜபாளையத்தில் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்ற நச்சாடைதவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலின் தெப்பத் தேர் திருவிழா!


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியின் கிராமப்புற பொதுமக்களின் நீண்ட வருட கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கையால் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தேவதானம் அருள்மிகு நச்சாடைதவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலின் தெப்பத் தேர் திருவிழா 

பரம்பரை அறங்காவலர் முனைவர் துரை.ரத்னகுமார் அவர்கள் தலைமையில், எஸ்.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்தெப்பத்தேர் திருவிழாவில் தேரை வடம்பிடித்து தங்கப்பாண்டியன் MLA, பரம்பரை அறங்காவலர், வாரியத்துணை தலைவர் ராசா அருண்மொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தங்கப்பாண்டியன் MLA 

அவர்களின் ஏற்பாட்டில் தெப்பத்திருவிழாவிற்கு வருகைபுரிந்த பக்தர்கள், பொதுமக்கள் என 4000 நபர்களுக்கு புளியோதரை, இனிப்பு பொங்கல், பிஸ்கெட் மற்றும் தண்ணீர்கேன் அடங்கிய பிரசாத தொகுப்பு பையை தங்கப்பாண்டியன் MLA அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேவதானம் அருள்மிகு நச்சாடைதவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலில் தெப்பத்திருவிழா நடத்துவதற்கு 30 ஆண்டுகளாக பழுதடைந்த காணப்பட்ட தெப்பை 


சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் 2018 ம் ஆண்டு முதல் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் தெப்பத்தை ஆய்வு செய்து என தொடர் முயற்சி மேற்கொண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் 

தெப்பத்தை சீரமைக்க ரூ.5.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.08.2022 அன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து தங்கப்பாண்டியன் MLA அவர்கள் தெப்பத்தை சீரமைக்கு பணியை விரைவுபடுத்தி பணி தற்போது முழுமை பெற்றதை 17.02.2025 அன்று காலை 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். திராவிட மாடல் ஆட்சியில் இராஜபாளையம் தொகுதியின் மிகப்பெரிய சாதனையாக இன்று தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்தெப்ப திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுக்கும், நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கும் 

இராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக தங்கப்பாண்டியன் MLA அவர்கள் கூறினார். இத்திருவிழாவில்  தனுஷ் எம்.குமார்.,Ex.MP, செயல் அலுவலர் கலாராணி நகர செயலாளர் (தெற்கு)  ராமமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் என ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!