நிலவன்தினசரி செய்தி நாளிதழில் இருந்து..

 நாள்:- 25.03.2025 (செவ்வாய்க்கிழமை)

👉.பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லை கிராமத்தில் இடப் பிரச்சினையில் கார் ஓட்டுனரின் குடும்பத்தை பழிவாங்க 4 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை. 

👉.கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவங்குகிறது.

👉.விருத்தாச்சலம் அடுத்த கம்மாபுரம் அருகே இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை காட்டி பணம் பறித்த 2 நபர்கள் கைது.

👉.கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகே வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய வழக்கில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடிக்கு கால் முறிவு. 

👉.கருவேப்பிலங்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்தும், இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம். 

👉.புவனகிரி அருகே பிரசன்னா ராமாபுரம் பகுதியில் உரிய மருத்துவம் படிக்காமல் வைத்தியம் செய்த போலி மருத்துவர் கைது. 

👉.ராமநாதன் அருகே காலில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து பிளஸ் 1 மாணவன் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

👉.கடலூர் கே.என்.பேட்டை திருமலை நகரில் ஸ்ரீ சிவசக்தி சிறப்பு பள்ளியின் 20-வது ஆண்டு விழாவை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

👉.ஐதராபாத் மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு கடலூர் வழி மார்க்கமாக சிறப்பு ரயில் 3 மாதங்களுக்கு இயக்கப்படுகிறது.

👉.புதுச்சத்திரம் அருகே ஆண்டார்முள்ளி பள்ளம் 40 வயது கூலித் தொழிலாளி 13 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததால் போக்சோவில் கைது.

👉.வெப்ப அலை தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அவசியம் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

👉.கடலூர் பாரதி சாலை புதுநகர் காவல் நிலையம் எதிரே உள்ள மின்கம்பம் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. 

👉.கடலூர் அரசு கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வைத்து பேராசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

👉.நெல்லிக்குப்பம் கீழ்பாதியில் அரசு உதவி பெறும் புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.

👉.மறைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த முத்து கோதண்டராமன் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

👉.விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு பானை சின்னம் வழங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக பண்ருட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

👉.கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

👉.கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 994 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு. 

👉.சாமியார் பேட்டை கடலில் நேற்று காலை கரை ஒதுங்கிய மஞ்சள் நிற உருண்டை வடிவ போயோ கருவியால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

👉.கடலூரில் உள்ள புனித வளனார் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கான புத்தாக்க ஆளுமை திறன் பயிற்சி நடைபெற்றது.

👉.கடலூர் அருகே இரட்டை கொலை வழக்கில் கைதான வாலிபரின் வீட்டில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

👉.ஸ்ரீ முஷ்ணம் அருகே சாத்தாவட்டம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக கூறி குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பாமல் மறியலில் ஈடுபட்ட மக்கள்.

👉.நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடியில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் மின் நுகர்வோர் குறை கேட்டு கூட்டம் நடைபெறுகிறது.

👉.புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

👉.கடலூர் மாநகரப் பகுதியில் மக்களிடம் கெடுபிடியாக வரி வசூல் செய்ததால் 2 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து ஊழியர்கள் போராட்டம்.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!