கடலூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டம் அரசு வழிகாட்டு நெறி முறைகளை பின் பற்றி நடத்திட தகவல் வெளியிட்ட மாவட்ட ஆட்சியர். ஷேக் அப்துல் ரஹ்மான்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டம் அரசு வழிகாட்டு நெறி முறைகளை பின் பற்றி நடத்திட தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி, கடலூர் மாவட்ட விளையாட்டரங்கில்,நீச்சல் பயிற்சி வகுப்பு 1.4.2025 முதல் 13.4.2025 வரையும், 15.4.2025 முதல் 27.4. 2025 வரையும், 29.4.2024 முதல் 11.5.2025 வரையும், 13.5.2024 முதல் 25.5.2025 வரையும், 27.5.2024 முதல் 8.6.2025 வரை ஐந்து பிரிவுகளாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும்சிறப்பாக நடத்தப்படவுள்ளது. 12 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.12 நாட்களுக்கு பயிற்சி.கட்டணம் ரூ.1770 ஆகும். கட்டணம் செலுத்த வரும் போது ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். ஒருவருக் கான பயிற்சி நேரம் ஒரு மணி நேரம் ஆகும். நீச்சல் குளம் திங்கள்கிழமை மட்டும் விடுமுறையாகும். மேலும் தகவல் பெற மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நீச்சல் குள பயிற்சியாளர் அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரடியாகவோ அல்லது 9442658016, 7401703495 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக