பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர் தேவநாதன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர். சங்கர் ஜூவால் ஐபிஎஸ் வழங்கல்!
பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர் தேவநாதன் அவர்கள் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் வாகன போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது வயதான மூதாட்டி ஒருவர் திடீரென சாலையை கடக்கும் முற்பட்டபோது போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தேவநாதன் சமயோதமாக பாட்டியின் கையை பிடித்து நிறுத்தி, பின்னர் பத்திரமாக சாலையை கடக்க உதவி செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் அவர்களை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சங்கர் ஜுவால் IPS பாராட்டி வெகுமதி வழங்கினார். பின்னர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் போக்குவரத்து உதவி ஆய்வாளரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக