நிலவன் தினசரி செய்தி நாளிதழில் இருந்து!
நாள்:- 21.03.2025 (வெள்ளிக்கிழமை)
👉.வல்லம்படுகையில் என்ஜினியர் வீட்டில் 10½ பவுனை கொள்ளை அடித்த சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர், காவலரை கத்தியால் வெட்டி விட்டு தப்பித்தபோது சுட்டுப் பிடிக்க பட்டார்.
👉.புத்தூர் அரசு கலை கல்லூரியில் பயிலும் சிதம்பரம் கவரப்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவன் கல்லூரி எதிரே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
👉.கடலூரில் தேர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆட்சியர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
👉.தேவனாம்பட்டினம் சுனாமி நகரில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
👉.கடலூர் மாவட்டத்தில் பழங்குடியின என்ஜினியர்கள் புத்தாக்க பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
👉.கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் 108 சங்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
👉.சிதம்பரம், புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது.
👉.தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் கடலூரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அரசு முன்வர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
👉.கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் சூசையப்பர் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
👉.விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் விடையாற்றி உற்சவத்தில் நேற்று பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு காய்கறி, பழங்களால் சுவாமி அலங்காரம் செய்தனர்.
👉.கடலூரில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெள்ளரி பழம் மற்றும் பதநீர், இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
👉.சி.முட்லூர் பகுதியில் நெடுஞ்சாலை துறை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் பொதுமக்கள்.
👉.குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து விருத்தாச்சலம் மணிமுக்தாற்றில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
👉.கடலூர் செம்மண்டலம் அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்த 147 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
👉.புவனகிரி அடுத்த ஆதனூர் கிராமத்தில் டாஸ்மார்க் கடையில் வாடிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்.
என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக