நிலவன் இன்றைய தினசரி செய்திகள் தினசரி செய்தி நாளிதழில் இருந்து!

 நாள்:- 12.03.2025 (புதன்கிழமை)

💌.விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு படம் பிடித்து இழுத்தனர்.

💌.எந்தவித பாதிப்பும் வராது என்றும் எம்.புதூரில் தான் புதிய பேருந்து நிலையம் அமையும் என்றும் கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் திட்டவட்டம்.

💌.கங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட தாண்டவக்குப்பம் பகுதியைச் சேர்ந்த என்.எல்.சி சுரங்க ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

💌.மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க கவுன்சிலருக்கும், தி.மு.க பெண் கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பா.ஜ.க கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார். 

💌. பண்ருட்டியில் முதியோர் உதவித் தொகை பெற்று தருவதாக கூறி வீடுகளில் தனியாக இருந்த 3 பெண்களிடம் நூதன முறையில் நகைகளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

💌.கடலூரில் புதிய பேருந்து நிலையம் கடலூரிலே அமைக்க வேண்டும். எம்.புதூரில் அமைவதை கண்டித்து அனைத்து குடியிருப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

💌.மந்தாரக்குப்பத்தில் பெட்ரோல் ஊற்றி கொத்தனாரை எரித்துக் கொள்ள முயன்ற அவரது மனைவி, மருமகள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

💌. கடலூரில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர். இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.

💌.முதுநகர் மோகினி பாலம் அருகே திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த அரசு அதிவிரைவு பேருந்து பக்கவாட்டில் இருந்த கடை மீது மோதி மோதியது இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் படுகாயம்.

💌.மாநகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் அதிகாரிகள் கெடுபடியாக நடந்து கொள்கிறார்கள். என்று கவுன்சிலர்கள் வைத்த குற்றச்சாட்டை சரி செய்வதாக ஆணையர் உத்தரவு.

💌.கடலூரில் வருகிற 22-ம் தேதி சனிக்கிழமை துவங்க இருக்கும் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல். 

💌.கடலூர் வண்ணாரப்பாளையம் புதுத்தெருவில் தந்தை இருந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவன் இச்செயல் அப் பகுதியினரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

💌.விருத்தாச்சலம் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ33½ லட்சம் மோசடி செய்த கேரளா வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

💌.தென்மேற்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையினால் , கடலூரில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி குளம் போல் ஆகியது.

💌.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலய தேரடி வீதியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெறும் என அமைச்சர் அறிக்கை.

💌.ஸ்ரீ முஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் இந்து சமய அற நிலை உதவி ஆணையர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டது. ரூ.6½ லட்சம் காணிக்கை வசூல்.

💌.காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி மாநில விருதுடன் , ரூ.1 லட்சம் காசோலை முதலமைச்சர் இடம் இருந்து பெற்றார். 

💌.விருத்தாச்சலம் ஜங்ஷன் இரயில்வே நிலையத்தில் மத்திய மந்திரி பதவி விலக கோரி வி.சி.கா.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 15 பேர் கைது.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!