ராஜபாளையத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கிய. எம். எல். ஏ. தங்கபாண்டியன்!


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் தெற்கு வெங்காநல்லூர் த.நீராறு தேவதானம், ந.சீதாபிராட்டி, இராஜபாளையம் ஆர்.வெங்கடேஷ், 

V.மங்கையர்க்கரசி, V.வனலிங்கம் ஆகிய 5 சாலையோர வியாபாரிகளுக்கு  MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தள்ளுவண்டி வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் சிறப்பாக வியாபாரம் செய்து வாழ்வில் வெற்றி பெற்று மிகப்பெரிய வியாபாரியாக வளர வேண்டுமெனவும், தங்களிடம் வரும் பொதுமக்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 


அவர்களின் சிறப்பு திட்டங்களை எடுத்துரைக்கவும் தற்போது தமிழ்நாட்டின் சிறப்பான பட்ஜெட்ஸ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்-ல் அறிவிக்கப்பட்ட சிறப்பான திட்டங்களையும் பொதுமக்களிடம் கூறவேண்டுமெனவும் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காப்பாற்றி வளர்ச்சி பாதையில் 

கொண்டுசென்று வருகிறார், ஆகவே மீண்டும் 2026 ம் ஆண்டு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வேண்டுமென பறைசாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் பேரூர் சேர்மன். ஜெயமுருகன் பாலசுப்பிரமணியன்,பேரூர் கழக செயலாளர். இளங்கோவன், மாவட்ட 

மீனவரணி அமைப்பாளர். நவமணி, ஒன்றிய கழக நிர்வாகிகள். மலர்மன்னன், திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி. சுரேஷ், கிளைச் செயலாளர்கள். அரிராம்சேட், கோவிந்தராஜ், லட்சுமணன், ஆதிதிராவிடர் அணி நிர்வாகி. சேகர், மாணவரணி. சுபாஷ் (எ) இந்திரஜித், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!