ராஜபாளையம் அருகே புதிய அங்கன்வாடி மையம் மற்றும் நியாய விலை கடை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைப்பு!


விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தொகுதியில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2023 - 24) நிதியிலிருந்து புத்தூர் ஊராட்சியில் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ப்ரியதர்ஷினி என்ற குழந்தையை வைத்து MLA தங்கப்பாண்டியன் அவர்கள் திறந்து வைத்தார். 


அதனைத்தொடர்ந்து சுந்தரராஜபுரம் ஊராட்சியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட நியாய விலைக்கடையையும் MLA எஸ். தங்கப்பாண்டியன் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் புத்தூரில் குழந்தைகளுக்காக சிறப்பான அங்கன்வாடி மையம் அமைத்து கொடுத்த MLA அவர்களுக்கு அங்கன்வாடி பணியாளர் முத்துலட்சுமி அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.  

சுந்தரராஜபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் பலவருட கோரிக்கையான நியாய விலை கடையை திறந்து வைத்த MLA அவர்களுக்கு  பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர், அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் MLA அவர்கள் இனிப்புகளை வழங்கினார். 

இதில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர். முத்துச்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். ராமலட்சுமி, அங்கன்வாடி பணியாளர். முத்துலட்சுமி, மாவட்ட பிரதிநிதி. கணேசன், கிளை கழக செயலாளர்கள். பாலகணேஷ், கருப்பையா, கருணாகரன், மாடசாமி, லிங்கராஜ், சுருளி, கனகராஜ், கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், குழந்தைச் செல்வங்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!