ராஜபாளையம் தொகுதியில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கோலப்போட்டி தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்பு!


இராஜபாளையம் தொகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கிராமம், பேரூர் மற்றும் நகராட்சி பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புகைப்படம் & சிறப்பு திட்டங்களை பிரதிபலிக்கும் பிரம்மாண்டமா கோலப்போட்டி நடைபெற்றது. 

இக்கோலங்கள் அனைத்தையும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் கிராமம் கிராமமாகவும், பேரூர் மற்றும் நகராட்சி பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து கோலப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளை MLA அவர்கள் வழங்கினார். 

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் கோலப்போட்டி நடைபெற்றது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ள அனைவரும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும் பெண்களுக்கான சிறப்பான ஆட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்து வருகிறார் எனக்கூறினார். 

இப்போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் மீண்டும் 2026-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வேண்டுமென கோலத்தை வரைந்ததாக கூறினார்கள். அதற்கு பதிலளித்த MLA அவர்கள் பெண்கள் ஆதரவு பெற்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் முதல்வராவது உறுதி எனக்கூறினார். 

இந்நிகழ்வில் நகர செயலாளர்கள். ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பேரூர் கழக செயலாளர். இளங்கோவன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர். நவமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். மாரிமுத்து, கிளைச் செயலாளர்கள். தொந்தியப்பன், லட்சுமணன் உமா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். சுரேஷ், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!