தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு ராஜபாளையம் பகுதியில்தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் மக்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்பு!


விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தொகுதியில் (05.03.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இந்திராகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் (100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்) பணிபுரியும் மக்களுக்கு  மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

இதில் எம்எல்ஏ. தங்கப்பாண்டியன் அவர்கள் முத்துச்சாமியாபுரம் ஊராட்சி, காமராஜர் நகர் மற்றும் சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சி பகுதிகளில் நேரில் சென்று பணியாளர்களுக்கு மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். இந்நிகழ்வில் பணியாளர்களிடம் பேசிய MLA அவர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய குறிப்பாக கிராமப்பகுதியைச் சார்ந்த பெண்கள் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமென்ற நோக்கில் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கட்டணமில்லா பேருந்து வசதி, புதுமைப்பெண் திட்டத்தை  ஏற்படுத்தி கொடுத்துள்ளார் எனக்கூறினார். 

மேலும் தற்போது  100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக தரவேண்டிய ஊதியத்தை ஒன்றிய அரசு இதுவரையில் தரவில்லை , அதனை உடனடியாக தரவேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார் ஆகவே விரைவாக அதற்கான ஊதியம் வழங்கப்படும் எனக்கூறினார். மேலும் தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணியாளர்களுக்கு மோர் குளிர்பானம் வழங்க வேண்டுமென குரல் எழுப்ப உள்ளதாக கூறினார், 

அப்போது பேசிய காளியம்மாள் என்ற பெண்மணி முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எங்களுக்கு எல்லாம் குளிர்பானம் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்து கொண்டு இதுபோல் பணிசெய்யும் அனைத்து நாட்களிலும் அனைவருக்கும் குளிர்பானம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த MLA அவர்கள் உங்களது கோரிக்கையை கண்டிப்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்கள் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடைபெற இருக்கும் சட்ட மன்ற கூட்டத்தொடரிலும் கண்டிப்பாக குரல் எழுப்பப்படும் எனக்கூறினார்.

குறிப்பு : அனைத்து ஊராட்சிகளிலும் கிளர்க் அவர்கள் மூலம் குளிர்பானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர். கனகராஜ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர். நவமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர். முத்துச்செல்வி, ஒன்றிய கழக நிர்வாகிகள். மிசா நடராஜன் காந்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி. கணேசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர். மாரிமுத்து, கிளை செயலாளர்கள். சபரிமலை, வெங்கடேஷ், ஆனந்தன், லிங்கசாமி கருணாகரன், லட்சுமணன், மகளிர் அணி. ராணி, கழக நிர்வாகிகள்,  பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!