தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தேவஸ்தானத்தில் திருக்கோயிலின் தெப்பத்தைச்சுற்றி நடைபாதை முழுவதும் பேவர் பிளாக் தளம், கலையரங்கம் மற்றும் மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென கேள்வி எழுப்பிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!


சென்னை தலைமை செயலகத்தில்  (20.03.2025) தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் தேவதானத்தில் அமைந்துள்ள அன்னை தவம்பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலின் தெப்பைச்சுற்றி நடைபாதை முழுவதும் பேவர் பிளாக் தளம், கலையரங்கம் மற்றும் மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் கேள்வி எழுப்பினார், அதற்கு பதலளித்த இந்து சமயம் (ம) அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பணியின் பட்டியலை கொடுத்தால் நிதி வழங்கி பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், ஏற்கனவே நடைபாதை முழுவதும் பேவர் பிளாக் 

தளம், கலையரங்கம் மற்றும் மின் விளக்குகள் அமைக்க மதிப்பீடு தயார் செய்து வைத்திருந்த பட்டியலை கோரிக்கை மனுவாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் MLA அவர்கள் வழங்கினார், மேலும் மனுவை பெற்றுக்கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு மேற்கண்ட பணிகளை செய்து கொடுப்பதாக கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!