நிலவன் தினசரி செய்தி நாளிதழில் இருந்து!

 நாள்:- 26.03.2025 (புதன்கிழமை)

👉.செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த 25-வது அகில இந்திய துப்பாக்கி சூடும் போட்டியில் கடலூர் ஆயுதப்படை காவலர் 2-ம் இடம் பிடித்தார். அவருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

👉.வேப்பூரில் கர்ப்பிணிகளின் வீடுகளுக்கே சென்று வயிற்றில் வளரும் சிசு ஆணா பெண்ணா என கண்டறிந்த மூன்று பேர் கைது. 

👉. திட்டக்குடி அருகே மேல் கல் பூண்டி கிராமத்தில் காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்கு பெற்றோர் உட்பட மூன்று பேர் கைது. 

👉.தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கம் டாக்டர் எம்ஜிஆர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெற்று வருகிறது. 

👉.மழை வெள்ளத்தால் 218 ஹெக்டேர் விளைநிலங்கள் மணல்மேடுகளாக மாறியது பாதிக்கப்பட்ட 379 விவசாயிகளுக்கு ரூ.43½ லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தகவல்.

👉.எஸ்.எஸ்.எல்‌சி பொதுத்தேர்வு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இத்தேர்வை கடலூரில் 32,954 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

👉.தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் சுற்றி திரிந்த வெறி நாய் கடித்து ஏழு பேர் படுகாயம்.

👉.கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் சின்ன தைகால்துணித்துறை அருகே திருமணமான ஓர் ஆண்டில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

👉.துணை வட்டார வளர்ச்சி அலுவலரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பொழுது தோட்டப்பாடி கிராமம் அருகே இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

👉.தொடர் குற்றச் செயலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி உத்தரவு.

👉.பாதிரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட நத்தவெளி பகுதியில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 74 குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

👉.கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைக்க ஏற்பு மற்றும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை ஆட்சியில் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

👉.கடலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தி விற்பனை செய்பவரை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு.

👉.புதிய பேருந்து நிலையத்தை எம்.புதூரில் அமைக்கும் முடிவை கைவிட்டு கடலூரில் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினர்  நாளை தெருமுனை பிரச்சாரம் நடத்த முடிவு.

👉.கடலூர் மாநகராட்சி 34- வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துணை மேயர் நேரில் சென்று பார்வையிட்டார்.

👉.கடலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செங்கல் சூளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை.

👉.நெய்வேலி என்.எல்.சி குடியிருப்பில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!