நிலவன்தினசரி செய்தி நாளிதழில் இருந்து!
நாள்:- 18.03.2025 (செவ்வாய்க்கிழமை)
🎂.கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முதியவர் தன் வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறினார். அவர் கடலூர் கடற்கரையில் இருப்பது அறிந்த போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
🎂.காட்டுமன்னார்கோவில் அருகே செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் மனம் உடைந்து இனி வாழவே தேவையில்லை என தூக்கிட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
🎂.கடலூர் செம்மண்டலம் காந்தி நகரைச் சேர்ந்த பெண் கடன் தொல்லை தாங்காமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
🎂.பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு.அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து கடலூரில் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல். 34 பேர் கைது.
🎂.கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே மேல் தவர்த்தாம்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த நபரை வாய்க்காலில் இருந்த முதலை கடித்து படுகாயம்.
🎂.தமிழக அரசு அறிவித்துள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு தாலுகா பகுதிகளும் நாளை திட்டக் கள ஆய்வு செய்ய ஆட்சியர் தகவல்.
🎂.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் பண்ருட்டி லிங்க் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை மனு.
🎂.தூக்கணாம்பாக்கத்தில் திருமலை கொழுந்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகளை துவக்கி வைத்து பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
🎂.குறிஞ்சிப்பாடி உடையார் தெருவை சேர்ந்த ஓட்டுநர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
🎂.பழங்குடியின மாணவர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
🎂.கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 30 கிலோ மீட்டர் தூரம் பிளாஸ்டிக் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
🎂.விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கையில் பச்சிளம் குழந்தையுடன் இருந்ததை கண்ட போலீசார் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
🎂.தென் மாவட்டங்களில் ஆதி திராவிட மக்கள் மீதான சாதி வன்கொடுமையை தமிழக அரசும், காவல்துறையும் தடுத்து நிறுத்த கோரி கடலூரில் வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
🎂. பரங்கிப்பேட்டை அருகே பெரியகுமட்டி கிராமம் பகுதியில் பயணிகள் நிழல்குடை அமைக்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
🎂.கடலூரில் தமிழ்நாடு அரசு மதுக்கடை ஊழலை பா.ஜ.க கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் முன்னெச்சரிக்கையாக கடலூரில் பா.ஜ.க.வினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
🎂.சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியை கிராம நகராட்சியுடன் இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
🎂.விருத்தாச்சலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் டியூஷனில் படித்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் கைது.
🎂.புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் அதிவிரைவு இரயிலில் மது பாட்டில் கடத்திச் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
🎂.கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் வியாழக்கிழமை நடக்க இருக்கிறது.
🎂.கடலூர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன் சம்பந்தமாக மாவட்ட தொழிலாளர் நல வாரியம் மற்றும் சிப்காட் திட்ட இயக்குனர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
🎂.கடலூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.10¾ லட்சத்தில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
🎂.பீகார் மாநில தர்பங்கா பகுதியைச் சேர்ந்த வாலிபர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து நெய்வேலியில் தங்கியிருந்தனர். இது குறித்து நெய்வேலி போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
என்றும் மக்கள் பணியில் நிலவன்
கருத்துகள்
கருத்துரையிடுக