நிலவன் தினசரி செய்தி நாளிதழில் இருந்து!

 நாள்:- 14.03.2025 (வெள்ளிக்கிழமை)

👉.கடலூர் முதுநகர் சுத்துக்குளம் அருகே 29,000 லிட்டர் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி மின்கம்பத்தில் மோதி மின்கசிவு ஏற்பட்டது. போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

👉.குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விழப்பள்ளம் பகுதியை சேர்ந்த நபர் குடிபோதையில் மனைவியிடம் வீட்டை எழுதி கொடுக்க கூறி தடியால் அடித்து கொன்றதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

👉.இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடை நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

👉.சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை தடுக்கும் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது. என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

👉.மாசி மகத்தின் 2-ம் நாளான நேற்று கடலூர் தேவனாம்பட்டினத்தில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

👉.கடலூர் தேவனாம்பட்டினத்தில் மாசி மகத்தின் 3-ம் நாளான இன்று வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். 

👉.சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய கடலூரில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

👉.தீர்த்தனகிரி அரசு மருத்துவமனை முன்பு சிமெண்ட் சாலை அமைக்காததால் மழை பெய்த சேற்றில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

👉‌.கடலூர் நத்தப்பட்டு கஷ்டம்ஸ் சாலையில் விஸ்வ மகாதேவ் மருத்துவ மையத்தில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 

👉.விருத்தாச்சலம் காவல் உதவி-ஆய்வாளர் தலைமையில் போலீசார் ரோந்து பணியின் பொழுது டிப்பர் லாரியில் கிராவல் மணல் கடத்திச் சென்ற நபரை கைது செய்தனர்.

👉.கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை சனிக்கிழமை துவங்குகிறது.

👉.சேத்தியாதோப்பு அடுத்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

👉.கடலூரில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

👉.விருத்தாச்சலம் அருகே மனித மலக்கசடு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

👉.கடலூர் தேவனாம்பட்டினத்தில் மாசி மகத்தில் பல்வேறு அமைப்பினர் முன்வந்து சுவாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

👉.கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2 மாதத்தில் 2972 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல். 

👉.குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமணமான ஓராண்டில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

👉.மந்தாரக்குப்பத்தில் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட கொத்தனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி, மருமகள் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார். 

👉.அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்றத்தின் கூட்டம் வருகிற 21-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி அளவில் கடலூர் வண்ணாரப்பாளையம் அஞ்சலகத்தில் நடைபெறுகிறது. 

👉.வடலூர் நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அப்பகுதியில் உள்ள கடைகளில் ரோந்து பணியில் இருக்கும் பொழுது 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

👉‌.வடலூர் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த நபரின் மகன் பிளஸ் 2 படிக்கும் மாணவன் புதுச்சத்திரம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த பொழுது மூழ்கி உயிரிழந்தார்.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!